தெலுங்கானாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவாகியதை அடுத்து, வெளிநாட்டிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டத்திற்குத் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ...

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான ...

ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை மாற உள்ளது. ...

குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இதையடுத்து, அவரது பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் 15-வது குடியரசுத்தலைவராக ...

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அப்பகுதியிலிருந்து சுமார் 6,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 14,000 ஏக்கருக்கும் அதிகமான அளவில் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,000 தீயணைப்பு வீரர்கள் 17 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் ...

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 100 க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனுர் அட்டுக்கல் என்ற இடத்தில் இயங்கி வந்த காப்பகம் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே வருவாய்துறையினரால் சீல் வைக்கப்பட்ட காப்பகமாகும். இரண்டு மாதங்களாக ...

டெல்லி: பாஜக மாநிலத் தலைவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பாஜக கட்சி வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 ...

கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் .இவர் மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம் பாரதியார் ரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 20ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு  உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது கடையின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த ...

கோவை: கோவை பீளமேடு வி கே ரோடு பகுதிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பீளமேடு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கருப்பராயன் பாளையம் மைத்ரேயன் ( வயது 22) ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி, கொள்ளு பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் சக்திவேல்( வயது 27) இவர் நேற்று பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ...