பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி, கொள்ளு பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் சக்திவேல்( வயது 27) இவர் நேற்று பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மனைவி ஜோதிமணி பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..