பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்.

இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.