சேவல் சண்டை சூதாட்டம்- கோவையில் 3 பேர் கைது..!

கோவை: கோவை பீளமேடு வி கே ரோடு பகுதிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பீளமேடு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கருப்பராயன் பாளையம் மைத்ரேயன் ( வயது 22) ராஜ்குமார் (வயது 25) அன்னூர் ராஜேஸ்வரன் ( வயது58) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 5 சேவல், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.