கோவை பேன்சி ஸ்டோரில் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை..!

கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் .இவர் மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம் பாரதியார் ரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 20ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு  உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது கடையின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து கவரிங் நகைகள்,பேன்சி சாமான்கள்,மர சாமான்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.இவைகளின் மொத்த மதிப்பு ரூ 4. லட்சம் இருக்கும் .இது குறித்து பாலசுப்பிரமணியன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.