கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள ஆத்துபாலம் அருகில் ஆற்றில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும்.அவர் யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஆழியார் கிராம நிர்வாக அதிகாரி சித்தேஸ்வரன் ஆழியார் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத ...
கோவை அருகே உள்ள சுந்தராபுரம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சுரேந்திரன் (வயது 30) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...
கோவை சுந்தராபுரம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மதன்குமார் (வயது 31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதற்காக ரூ1 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கேட்டார். இதை நம்பி மதன் குமார் வங்கி மூலம் ரூ 1 லட்சம் அனுப்பி வைத்தார்.வேலை எதுவும் வாங்கிக் ...
கோவை தடாகம் பகுதியில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அன்னூர் அடுத்த நாரணாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் தடாகம் நோக்கி சென்றது . அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நாரணாபுரம் ஏ.டி காலனி பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ...
கோவை ரத்தினபுரி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று மாலை ரத்தினபுரி லட்சுமி அம்மாள் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த ...
கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் தனது மாமா சாதிக் என்பவருடன் நேற்று அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஷாஜகானின் காலணி ஆற்றில் விழுந்தது. உடனே அவர் ஆற்றில் குதித்து காலணியை எடுக்க சென்றார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. ...
கோவை வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியை அழைத்து கொண்டு பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்டது. இதனை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி .நகர் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 56) தொழில் அதிபர். இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இவர் வியாபாரம் தொடர்பாக சென்னைக்கு சென்றார்.மறுநாள் கோவை திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ 16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. ...
கோவை: நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ...
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு ...













