கோவை சுகுணாபுரம் மைக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை அளித்ததால் பரபரப்பு. மாநகர உதவி காவல் ஆணையாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை ...
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி ...
கோவை: கோவை நகரில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் கஞ்சா சப்ளை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இதை கண்டுபிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளம் பெரியார் நகர், முத்தாலப்பன் (வயது 33), செல்வபுரம் கல்லா மேடு. ராஜா ( வயது 41)ஆகியோரை ...
கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42) இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாகஜோதி (வயது 42) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். குடும்பத்த தகராறு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேல்முருகன் மீனா என்ற ...
பசுவின் கோமியத்தை(சிறுநீர்) லிட்டர் ரூ.4க்கு வாங்கும் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கிவைத்தார். தனது வீட்டிலிருக்கும் பசுக்களின் சிறுநீரை 5 லிட்டர் விற்பனை செய்து ரூ.20 பெற்றுக்கொண்ட முதல்வர் பூபேஷ் பாகல், அந்தப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஹரேலி ...
தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ...
மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை ...
கோவை;கோவை மாவட்ட போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கந்து வட்டி வசூலித்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய், 379 சொத்து ஆவணங்கள், வெற்றுக் காசோலைகள், 48 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் கந்து வட்டி கொடுமை அதிகமாக இருப்பதாக, எஸ்.பி., பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன. ...
சீனாவின் உணவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் ...
சென்னை: நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ...