தொழிற்சாலையில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு..

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52) இவர் கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் மெட்டல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது கை மின் ஒயரில் பட்டது.இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இது குறித்து அவரது தாயார் ரங்கம்மாள் தடாகம் போலீசில் புகார் செய்துள்ளார். சப் -இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.