எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் லஞ்ச ஒழிப்பு போலீசாரினசோதனையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 அதிமுகவினர் மீது வழக்குபதிவு..!

கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.இன்று காலையில் குனியமுத்தூர் சுகுணாபுரம், கிருஷ்ணா நகரில் உள்ள அமைச்சர் எஸ் பி.வேலுமணியின் வீடு கொடிசியா இஸ்கான் கோவில் அருகே உள்ள சந்திர பிரகாஷ் அலுவலகம்,பீளமேடு அண்ணா நகரில் உள்ள அவரது அலுவலகம், ஆர். எஸ் .புரம் .திலகர் வீதி உள்ள சீனிவாசன் என்பவரது வீடு வடவள்ளி நாரணய சாமி நகரில் உள்ள சந்திரசேகர் வீடு கே.வி. ராஜன் வீடு உட்பட 10இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையை அடுத்து 10 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதை அறிந்த அதிமுகவினர் சுகுணா புரத்தில் உள்ள அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வீட்டின் அருகே திரண்டனர்.அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் அதிமுக வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட.சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன்,பி ஆர் ஜி அருண்குமார் தாமோதரன் கந்தசாமி அமுல் கந்தசாமி கே. ஆர். ஜெயராம் ஏ. கே செல்வராஜ்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 100க்கு மேற்பட்ட அதிமுகவினரும் கைதானார்கள். இவர்கள் வேனில் ஏற்றி செல்லபட்டு ஒரு திருமண மண்டபத்தில் வைக்கபட்டனர். மறியலில் ஈடுபட்ட 7எம்எல்ஏக்கள் மற்றும் 318 ஆண்கள் 72 பெண்கள் உட்பட 390 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.