முன்னாள் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில்16 பவுன் நகை, பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை..!

கோவை ,சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச். எஸ் காலனியில் உள்ள ,ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கபட்டிருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் ,அரை கிலோ வெள்ளி பொருட்கள், பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.