கோவை: தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ...

மேட்டுப்பாளையம்: கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர். வாகனத்தை ...

ஊட்டி: நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை ...

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியலமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியின் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. அரசு ...

ஊட்டி: சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது. இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா். இவரது அறிவுறுத்தலின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே தடுப்புச் சுவா் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாய் மற்றும் மகனுடன் வந்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் இளம்பெண் கூறியதாவது:- ...

டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ...

மதுரையில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90, கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ...

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக தகவல். சட்ட விதிகளை மீறினார்கள் என குற்றஞ்சாட்டும் ஒரு தரப்பு. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பிய நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் ...