எமன், அகோரிகள் மற்றும் சாமிகள் வேடமடைந்து வந்து கோவை கலெக்டரிடம் மனு..!

கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்ட மக்கள் பதற்ற நிலையில் இல்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் போலீசார் உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த நடவடிக்கைகள் தீவிர படுத்தகோரி இந்து அமைப்புகள் சார்பாக நடவடிக்கைகளை தீவிரபடுத்த கோரி எமன், அகோரிகள் மற்றும் சாமிகள் வேடம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கோவையில் நடைபெற்ற இந்த கார் வெடிப்பு சம்பவமானது திட்டமிட்ட பட்ட தாக்குதலாகும். கோவிலை தகர்க்க சதி நடந்துள்ளது. இந்த வழக்கை என். ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள். எனவே கோவை மாவட்டத்தில் மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் கலெக்டர் உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை எந்த ஒரு பாரபட்சமும் இன்றி விசாரணை செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். கோவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்