பைக்கில் இருந்து தவறி விழுந்து மனைவி பலி- கணவர் மற்றும் 2 குழந்தைகள் படுகாயம்..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர் ஏ.பி.எஸ் .நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் .இவரது மனைவி சரண்யா பிரியதர்ஷினி ( வயது 34)இவர்களுக்கு அக்ஷயா பிரிதி ( வயது 11) அஜய் வெங்கட் ( வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.ராமலிங்கம் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் பொள்ளாச்சி- அம்பராம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார.ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென்று பைக்கில் இருந்து நிலை தடுமாறி 4 பேரும் கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரண்யா பிரியதர்ஷினி நேற்று இறந்தார் . கணவர் ராமலிங்கமும் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது .இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கணவர் ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.