கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராகுல் ரங்கா ( வயது 34 )இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள வித்யா நகரில் கண் மருத்துவமனை டாக்டர்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லவில்லை.இதனால் சந்தேகமடைந்து இவருடன் வேலை ...
கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29) மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார் .நேற்று இவரது அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஸ்டீபன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று கோல்டு வின்ஸ் – வீரியம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் பீளமேடு பகுதியில் ...
கோவை – மும்பை இடையே இயக்கப்படும் குர்லா விரைவு ரயில், மின்மயமாக்கல் பணியால் ஒசூர் செல்ல 40 நிமிடங்கள் தாமதமாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி – ஒசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால், கோவையில் இருந்து மும்பை ...
கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை அடைக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், ...
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டெருமை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கரடிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கரப்பாடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) என்பவர் இருந்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பஸ்சில் சுமார் 40 பேர் இருந்தனர். ...
கோவையில் மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த ஜி.டி.நாயுடு குடும்ப இல்லம் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டு அவரின் 153-வது பிறந்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த நினைவகத்தை காந்திய ஆர்வலரும், பத்ம பூஷண் விருதாளருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திறந்துவைக்கிறார் நிகழ்ச்சிக்கு, நினைவகத் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகிக்கிறாா். ஜி.டி. குழும நிறுவனங்களின் தலைவா் ஜி.டி.கோபால், ராமகிருஷ்ண ...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார். கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ...
கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை எதுவும் ...













