கால் டாக்சி டிரைவரிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது..!

கோவை ரத்தினபுரி, கோவிந்தசாமி வீதியை சேர்ந்தவர் துரை (வயது 47) கால் டாக்சி டிரைவர். நேற்று இவர் அங்குள்ள ஒரு கடையின் முன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 400 ரூபாயை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து துரை ரத்தினபுரி போசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செங்கோல்நாதன் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் ரஞ்சித் (வயது 23) என்பவரை நேற்று கைது செய்தார் .இவர் மீது கொலை மிரட்டல், வழிப்பறி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.