ஆன்லைன் ரம்மி தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!!

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் முழ்கி ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

இதனையடுத்து தமிழகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இக்குழு தனதுஅறிக்கையை ஜூன் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டதைஅடுத்துமுதலமைச்சர்தலைமையிலானஅமைச்சரவை, செப்டம்பர் 16ம்தேதிஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் அமைச்சரவை பரிந்துரை அக்டோபர் 1ம்தேதி ஆளுநர் மாளிகைக்கு வந்ததாகவும், அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது அக்.17ம்தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.