புதுடில்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர்.தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர். நாடு முழுதும், ...

சென்னை: சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் ...

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை ...

சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...

வாஷிங்டன்: இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். ஆனாலும், உலகிலேயே அதிக ஏழை மக்கள் கொண்ட முதல் நாடாக இந்தியா உள்ளதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓபிஎச்ஐ ஆகியவற்றின் சார்பில் ...

இம்மாதம் 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதேபோன்ற பகுதி சூரிய கிரகணம் மீண்டும் 2032ல் காண முடியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே சுற்றுப்பாதையில் வரும். இது ஒரு பகுதி சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும். பகுதி சூரிய கிரகணம் இம்மாதம் 25ம் தேதி காலை 8.58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1.02 ...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் ...

கோவை குனியமுத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள ராயல் நகரை சேர்ந்தவர் பீர்முகமது ( வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் நள்ளிரவில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்து பீர் முகமது குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு ...

கோவை ஆர் .எஸ் .புரம் .காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ் .பி. ஐ .வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்தான். அங்கிருந்த சிசிடிவி கேமராவை இழுத்தான் இதனால் அபாய மணி ஒலித்தது .இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.இதுகுறித்து ஆர் ...

கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ...