42 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்ட விலை ஏற்றம்-பிரட்,பால் கூட வாங்க முடியாத இங்கிலாந்து மக்கள் அவதி..

இங்கிலாந்து நாட்டில் 42 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பால், பிரட், வாழைப்பழம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து மக்களின் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அவதி படுவது உண்மைதான் என்றும் ஆனால் அவர்களுக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னேறிய நாடு என்று கூறப்படும் இங்கிலாந்து நாட்டிலேயே அதிக உணவு பொருள் கூட வாங்க முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.