தீபாவளி ஸ்பெஷல்… இன்று முதல் தினமும் 7 காட்சிகளுக்கு அனுமதி- அதிரடி அறிவிப்பு..!

தீபாவளி என்றாலே, பலகாரம், பட்டாசு,புத்தாடை,புதுப்படம் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும்.

அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு காட்சிகள் குறித்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பது என்பது அலாதி பிரியம்தான். அதனாலேயே பண்டிகை காலங்களில், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம் கொரோனா பெருந்தொற்றால் கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து, இந்த வருடம் தான் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி தற்பொழுது எல்லா பண்டிகைகளையும் இயல்பாக கொண்டாட தொடங்கியிருக்கின்றனர்; குறிப்பாக இந்த முறை எக்கசக்கமான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களை தொற்றியுள்ளது.

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த சர்தார், சிவகார்த்திக்கேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் நாளை திரைக்குவர தயாராகவுள்ளன. இந்த நிலையில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று  முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரை தினமும் 7 காட்சிகள் வரை திரையிட்டு கொள்ளலாம் என அரசு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் மேலும் FDFS பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.