ஆறுமுகசாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஆறுமுக சாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- அன்புமணி ராமதாஸ்.

கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளதாகவும் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திகடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
பரம்பிகுளம் டேம் 12 டி எம் சி நீர் வீணாகியுள்ளதாகவும் இனி இது போன்று நடக்க கூடாது எனவும் கூறினார். கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும் என தெரிவித்த அவர் அதற்கான தேவை உள்ளதாகவும் கூறினார். ஒரே நாளில் விவாதம் இல்லாமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஜனநாயகம் இல்லை எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது என கூறிய அவர் முதல்வர் இதில் கவனம் செலுத்துகிறார் என்றும் ஆனால் அது போதுமானது இல்லை எனவும் தெரிவித்தார்.
போதுமான அளவு இந்தத் துறையில் காவலர்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். விமானத்தில் சென்னையில் இருந்து வந்தேன் 3300 ரூபாய் ஆனது இதே நிலை தான் ஆம்னி பேருந்திலும் உள்ளது என தெரிவித்தார். தனியார் பால்களின் விலை குறைக்க வேண்டும் எனவும் தனியார் பால் நிறுவனங்கள் மாபியா போல விலையேற்றம் செய்கின்றனர் எனவும் ஒரு வருடத்தில் நான்கு முறை விலை ஏற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.