முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என ...
பயிற்சி பள்ளிகளுக்கு என தனியாக, ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு நாளொன்றை ஒதுக்கி இருக்கிறது ஆர்.டி.ஓ. துறை. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில் போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட ...
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் ...
கோவை பீளமேடு ,நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர் ஆனந்த் ( வயது 42 )தொழிலதிபர். இவரது மனைவி ஹேமலதா ( வயது 39) நேற்று முன்தினம் (ஞாயிறு) விடுமுறை என்பதால் ஹேமலதா தனது 2 மகன்களுடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சாப்பிட சென்றார் ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள சூளேஸ்வரன் பட்டி, கண்ணகி வீதியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகன் ராம்குமார் ( வயது 19)இவர் மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ...
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சூழலில், எஸ்.பி.வேஎலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த 7 எம்.எல்.ஏ,.க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்தனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் ...
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி இளம்பெண் சென்றார். ...
கோவை: ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கோவை ரயில்வே உட்கோட்ட போலீஸ் நிலையங்களான கோவை, போத்தனூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் ஈரோடு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ...
குனியமுத்தூர்: கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 1 விரிவு பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர், முருகன், சிவன் கோவில்கள் உள்ளது. இந்த நிலையில் கோவிலை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவிலை அகற்ற, கோர்ட் வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு-என்.எச். ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் ரூ. 50 ஆயிரத்தை தவற விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 42) கணுவாய் ஜெகன் (வயது 20)காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் கீழே கிடந்த அந்த பணத்தை எடுத்தனர். தொலைத்தவர்கள் யாராவது ...