5 வெளி மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் கோவையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு..!!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகில் கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் பலியானார் .இந்த சம்பவத்தை தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உமா, ஸ்ரீதேவி, ராஜன், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் கடந்த 23ஆம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள் பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு உக்கடம், குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் இது தவிர சி.ஆர்.பி.எப் , துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாநகரில் இரவு பகலாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 4கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவையில் ஏற்கனவே உள்ள 11 சோதனை சாவடிகள் தவிர மேலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு பகலாக வாகன சோதனை நடந்து வருகிறது.