கோவை நகை கடையில் வாடிக்கையாளரின் 5 பவுன் திருடிய பெண் கைது..!

கோவை போத்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத் ( வயது 62) இவர் கரும்பு கடையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மனைவியுடன் நகை வாங்க சென்றார். 5 பவுன் நகை வாங்கிவிட்டு அந்த நகையை பையில் வைத்திருந்தார்.அந்தப் பையை கடையில் உள்ள நாற்காலியில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அதிலிருந்து 5 பவுன் நகைகளை காணவில்லை.இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்த முகமது உசேன் மனைவி சமீரா ( வயது 32) என்பவரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.