கோவை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவுகத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் ...

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு பகுதியில் வசிப்பவர் ரஹீம் குட்டி (59). கவுன்சிலர் இவர் விலகோடி கிராம பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமீது மகள் ஸஜினா (38). இவர்கள் 2 பேரும் கொல்லம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவனேஸ்வரம் ரெயில் நிலையத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயிலுக்காக ...

கோவை: பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ...

கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37-வது ...

கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில்ஸ், விவேக் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது 17) பிளஸ் டூ படித்துள்ளான். இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சேரன் நகர் சந்திப்பில் சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறி  பைக்குடன் கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம் பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் சூர்யா ( வயது 17) இவர் ஒண்டிப்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களுடன் வரதராஜபுரம், மாநகராட்சி பள்ளிக்கூட ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு ...

கோவை :மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சகர் உரையின் ( வயது 22) சக நண்பர்களுடன் சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் தங்கியுள்ளார். கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை செய்து வந்தார். முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.பின்னர் அந்த பொண்ணுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சாகர் ...

கோவை : வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து நேற்று காலை கோவை விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் ராமநாதபுரம் ...