எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகி உட்பட 18 பேர் வீடுகளில் போலீசார் சோதனை..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்து 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் ஜமேஷா மூபின் பலியானார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ ) மாற்றப்பட்டது.இதை யடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை உக்கடம் ஜி. எம் .நகரில் வசித்து வரும் ராஜா உசேன் என்பவரது வீட்டில் நேற்று போலீசார் திடீர்சோதனை நடத்தினார்கள். இவர் எஸ். டி. பி. ஐ .கட்சி நிர்வாகியாக உள்ளார். உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் இந்த சோதனை நடந்தது. மேலும் உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் வீட்டில் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலும் சாய்பாபா காலனி உள்ள மற்றொரு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ஆனா ரோஷன் என்பவரது வீட்டிலும், அன்பு நகரிலுள்ள த.மு.மு.க. நிர்வாகி சாதிக் அலி என்பவர் வீட்டிலும் மொத்தம் 18 பேர் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்”இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தில் ‘அடிப்படையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை மாநகரில் சோதனை நடத்த வேண்டியவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த காவல் நிலையம் வாரியாக தயார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் தமுமுக நிர்வாகிகள் , தமுமுக நிர்வாகிகள் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இன்றும் சோதனை நடந்து வருகிறது.