வீடு தேடி இனிப்புடன் வந்த மம்தா பானர்ஜி… முதல்வர் ஸ்டாலின் வழங்கிய புத்தக பரிசு… கூட்டாக சேர்ந்து கொடுத்த பேட்டி..!

ரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகளை பரிசாக வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். இரண்டு நாள்கள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

மம்தா பானர்ஜி பேட்டி! அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி கலந்துரையாடினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.