கோவை கார் வெடிப்பு சம்பவம்: ஜமேஷா முபின் போலி பெயர்களில் வெடிபொருள்களை வாங்கியது கண்டுபிடிப்பு..!!

கார் வெடிப்பு சம்பவத்திலிருந்து ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்களை சிம்கார்டுகளை பயன்படுத்தி போலிப் பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் மூலம் வாங்கிய பொருள்கள் குறித்து விபரங்களை தனது செல்போனில் இருந்து உடனுக்குடன் அளித்துள்ளார். மேலும் சந்தேகம் வராமல் இருக்க வெவ்வேறு சிம்காடுகளை பயன்படுத்தி உள்ளார். போலீசார் ஜமேஷா முபின் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரிடம் இருந்து 10 க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ஏராளமான சிம்கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதில் உள்ள ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற முன் பதிவான அனைத்து செல்போன் எண்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம் அவர்களின் பின்னணி ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி மற்றும் ஜமேஷா முபின் வீடு அருகே உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.