கோவை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் ...
டெல்லி இளம்பெண் கொலை வழக்கில் காதலனை அழைத்துக்கொண்டு 35 துண்டான காதலியின் தலை உள்பட உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ...
கோவை: திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை (17-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ...
கோவை: ஆவின் பால் பாக்கெட்டின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தை இறந்து விட்டார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு கோவையை சேர்ந்த ஹரிபிரசாத்(24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காதல் ஜோடிக்கு ...
ரவுண்ட் டேபிள் அமைப்பினர் சமூக நலத் திட்டங்கள் பிரச்சார வாகனத்திற்கு வரவேற்பு வடகோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள கடிகார கோபுரம் கடந்த 2018-ம் ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ரவுண்ட் டேபிள் இந்தியா தினத்தை முன்னிட்டு இந்த கடிகார கோபுரத்தின் முன்பாக ஆர்.டி.ஐ கடிகார கோபுரம் நாள் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ...
கோவை : கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் கவின் (வயது 31) இவர் கோவை காளப்பட்டி, அசோக் நகர் பகுதியில் மற்றொரு டாக்டருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வருகிற ஜனவரி மாதம் ...
நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் இந்து என்றும், அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுடைய சடங்குகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், வேற்றுமையில் ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் கடலுக்கு சென்றதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்கி விரட்டியடித்தனர். ...
போலந்தில் நாட்டின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷியா இடையே போர் நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய போர் தொடுத்து வருகிறது. ...












