GooglePay, PhonePeக்கு வந்தாச்சு புதிய கட்டுப்பாடுகள்… பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது.

எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள்.

நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி டிசம்பர் மாதம் அமலுக்கு வருகிறது. அதனை பின்பற்ற இந்நிறுவனங்கள் கட்டுப்பாடு கொண்டு வர இருக்கின்றன.