கல்லாப்பெட்டி சிங்காரம் கோவையில் வைரலாகும் அமைச்சரின் புகைப்படம்
கோவையில் மாநகர பகுதிகளில் தூண்களில் போஸ்டர் கலாச்சாரம் பெருகிவரும் நிலையில் அரசியல் கட்சியினர். இடையே மோதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு போராட்டங்களும், தடியடிகள், கைது போன்ற சம்பவங்கள் கோவையில் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து கோவை மாநகரில் தற்போது சமூக வலைதளங்களில் கார்ட்டூன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் அரசியல் கட்சியினர் மாறி மாறி புகைப்படங்களை கிண்டலுடன் பதிவு செய்யும் சம்பவங்களும் தற்போது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க கட்சியைச் சார்ந்த அமைச்சர் ஒருவரின் புகைப்படத்தை கார்ட்டூனாக பதிவு செய்துள்ளனர். அதில் மாடு மீது அமைச்சர் அமர்ந்து உள்ளதும், மாட்டின் கழுத்தில் டாஸ்மார்க் மது என்ற கயிறு போன்று பொருத்தப்பட்டு, இரண்டு காதுகளிலும் மதுபான பாட்டில்கள் தொங்குவது போன்றும், முதுகிலும் மது பாட்டில்கள், கையில் கல்லாப்பெட்டியை வைத்திருப்பது போன்று புகைப்படத்தில், கல்லாப்பெட்டி சிங்காரம் என்று வாசகத்துடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
Leave a Reply