தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்..!

கோவை :தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் தாமரைக்கண்ணன்.இவர் இன்றுபணி ஓய்வு பெறுகிறார்.இவர் 1997 – 98-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர்.பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும்.. பணியாற்றியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார்.குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்டவர். 1993ஆம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.பின்னர் டி.ஐ.ஜியாக ,ஐ.ஜி யாக பதவி உயர்வ பெற்று 29 – 6-2018–ல் -கூடுதல் டி.ஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.இதையடுத்து கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி. ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார்.கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின்போது உடனடியாக கோவைக்கு வந்தார்.கோவையில் 5 நாட்கள் முகாமிட்டு அமைதி நிலைநாட்டினார். இதில் துரிதமாக துப்பு துலக்கி 6 பேரை கைது செய்தார். தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இவருக்கு முதல் அமைச்சர் மு .க .ஸ்டாலின்.உள்துறை செயலர் இறையன்பு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு,உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்,ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.