ஓடும் பஸ்சில் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து 3 பவுன் தங்க செயின் கொள்ளையடித்த பெண்ணுக்கு வலை..!

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாஞ்சாலி ( வயது 70) இவர்சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார் .நேற்று வேலை செய்வதற்காக மதுக்கரையில் இருந்து கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அதேபயணம் செய்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இந்த மூதாட்டியிடம் இப்படி செயினைபோட்டு செல்ல வேண்டாம். யாராவது திருடி விடுவார்கள் .கழட்டி உங்கள் பர்சுக்குள் வைத்து தருகிறேன் என்று கூறினார்.இது நம்பி மூதாட்டி தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழட்டி அந்த பெண்ணிடம் கொடுத்தார்.அவரும் நகையை பர்சுக்குள் வைப்பது போல பாசாங்கு செய்துவிட்டுஅந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.சிவாலயா பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது பஸ்சை விட்டு இறங்கிய மூதாட்டி பாஞ்சாலி பர்சை திறந்து பார்த்தார்.அதில் செயின் இல்லை.உதவி செய்வது போல நடித்த அந்த பெண் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.இது குறித்து மூதாட்டி பாஞ்சாலி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.