பொங்கல் பண்டிகை: நாளை முதல் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டப்படுகிறது.

பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டாடுவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை,தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.

சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்கிறது. காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, சத்திய மங்கலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக கோவையில் இருந்து மதுரைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேனிக்கு 40 பஸ்களும், திருச்சிக்கு 50 பஸ்களும், சேலத்துக்கு 50 பஸ்கள் என 240 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அனைத்து பஸ் நிலையங்களுக்கு எளிதாக செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களில் இருந்து இணைப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது..