சென்னை: சென்னைவாசிகள் ஒரே நாளில் 31 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமமான அளவில் தீபாவளி நாளில் காற்று மாசு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பட்டாசை தடை செய்ய வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி முடிந்த மறுநாள் காலை, உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லியை ...

கோவையில் தீபாவளி பண்டிகையின் போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. என்.ஜி.புதூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 67 )நேற்று இவர் தீபாவளி தினத்தில் காலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து அங்குள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் ...

மைனாரிட்டி ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை முதல்வர் பலி கொடுக்கப் போகிறாரா?’ – வானதி சீனிவாசன் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார்.   இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ...

கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. ...

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ, டி.ஐ.ஜி வந்தனா, சூப்பரண்டு ஸ்ரீஜித் ஆகியோர் நேற்று இரவு கோவைக்கு வந்தனர். அவர்கள் கோவையில் தங்கி இருந்து சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சிலிண்டர் ...

கோவை இருகூர்- பீளமேடு செங்களியப்பன் நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

ஊட்டி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், மாவட்டத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். குறிப்பாக ...

கோவை: தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆண்டுதோறும் தீபாவளி ...

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் ...