கார் வெடி விபத்தை தொடர்ந்து கோவையில் உரக்கடைகளில் போலீசார் சோதனை..!

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்துக்கு தேவையான வெடி பொருட்களை குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் வாங்கிய தகவல் வெளியானதை தொடர்ந்து அது போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை தமிழக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கோவையில் மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, போலீஸ் நிலையதிற்கு உட்பட மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி, நாச்சிபாளையம், மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு உளவுத்துறை போலீசார் நேரில் சென்று சோதனை செய்தனர்.
அப்போது கடைகளுக்கும் முறைப்படி லைசென்ஸ் இருக்கிறதா? அங்கு வெடி மருந்து சார்ந்த பொருட்களான அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர், சார்க் கோள், கழிப்பிடங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அதிக வீரியம் உள்ள மருந்துகளை இதுவரை யார்? யார்? வாங்கியுள்ளனர், எத்தனை முறை வாங்கி உள்ளனர்.

அவர்களின் முகவரி என்ன? அவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொருட்கள் வழங்கப்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டனர். இனி வரும் நாட்களில் மேற்கண்ட பொருட்களை யார் வாங்க வந்தாலும் அவர்களின் முகவரி வாங்கி வைக்க வேண்டும். மேலும் அவர்களின் இடத்தை நேரில் சென்று பார்த்து விட்டு வழங்க வேண்டும். சந்தேகப்படும் வகையில் யாராவது பொருட்கள் வாங்கினால் அருகில் உள்ள போலீஸ் நிலையதிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.