என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ஏ படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில், திருவள்ளுவர் விடுதியிலுள்ள அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து தீபக் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய சக மாணவர்கள் தட்டிப்பார்த்தும் கதவு திறக்காததால் , கதவை உடைத்து பார்த்த போது பென்னிஸ் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக ஆம்புலென்ஸ் மூலம் வடவெள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு பென்னிஸ்குமாரை எடுத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பென்னிஸ்குமார் உயிரிழந்தார். வடவெள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னிஸ்குமார் இறப்பதற்கு முன்பு எழுதிய தற்கொலை கடிதத்தில் ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தான் வீட்டில் வைத்து இறக்க விருப்பமில்லை என்பதால் இங்கு தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது இறப்பிற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று (Suicide note) எழுதி வைத்துள்ளார் . அவரது உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.