கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39) இவர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும், டூரிஸ்ட் மையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவர் ஆசை வார்த்தை காட்டினார் .இதை நம்பி அவர் ஆக்சிஸ் வங்கி மூலம் 32 லட்சத்து 23 ஆயிரத்து 909 செலுத்தினார் .பின்னர் அந்த நபர் ரவிசங்கருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் துண்டித்து விட்டார். இது குறித்து ரவிசங்கர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply