கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் முருகேசன்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் ஆவார். இவரது மகன் சுதாகர் ( 38 ) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று அவிநாசி- கருமத்தம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அங்குள்ள காடுவெட்டி பாளையம் நால்ரோடு அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது தந்தை முருகேசன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply