கோவை நவ இந்தியா பகுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது ...

கோவை பி. என். புதூரைச் சேர்ந்தவர் ஜாலி பால். இவர்  இளங்கோவன் என்பவரிடம் அரை சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்பாக ரூ10 லட்சம் கொடுத்து இருந்தார் .இதற்காக நில உரிமையாளர் இளங்கோவன் பவர் உரிமை வழங்கினார் .இந்த நிலையில் இளங்கோவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் .இதையடுத்து இளங்கோவனின் மனைவி ஜானகி ஜாலி பாலிடம் ...

கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தர். .கூலி தொழிலாளி. அவரது மகள் ரிதன்யா ( வயது 14) இவர் வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரிதன்யாவின் ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக மதுக்கரை ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு ...

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டை சேர்ந்தவர் ராஜன் இவரது மகன் கவுதம் ( வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று கணுவாய் பன்னிமடை -வரப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மயங்கி ...

கோவை அருகே உள்ள இருகூர், மகாகவி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காரில் இருகூர் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் இவர் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் ஓட்டி வந்த இருகூர் டி. ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40 ) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் பி .என். புதூர் மருதமலை ரோட்டில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த ரூ ...

கோவை: தமிழ்நாடு முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன் சிலர் நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக மதுக்கரை போடிபாளையத்தைச் ...

கோவை: சென்னை போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பட்டு வரைக்கும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகர், மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவரது மனைவி ஸ்ரீதேவி, (வயது 38.) இவர்கள் கடந்த, 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சேலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.நள்ளிரவு, 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.அப்போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு ...

கோவை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது இந்திய அளவில் தானியங்களில் நெல் கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு, ராகி, குதிரைவலி, வரகு ...