சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வாகன பிரசார ஊர்தி- கொடியசைத்து தொடங்கி வைத்தார் கலெக்டர் சமீரன்..!

கோவை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது
இந்திய அளவில் தானியங்களில் நெல் கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு, ராகி, குதிரைவலி, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. தற்போது 2023-ம் ஆண்டினை சர்வ தேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தியை சிறு மற்றும் குறு விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் பரிந்துறைக்கப்படுகிறது. சிறுதானியங்களின் சாகுபடி மானாவாரி விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளது. சோளம் கோவை மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சோள விதை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு கோவை மாவட்டத்தின் தேவை போக பிற மாவட்டத்திற்கும் விதைகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் சிறுதானியங்களின் பயிரின் பரப்பினை அதிகரிக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் சிறுதானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் போன்றவைகள் மானிய விலையிலும், கை தெளிப்பான் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் பின்னேற்பு மானியமாகவும், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிலோவிற்கு ரூ.30-ம் வழங்கப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 37 கிராமங்கள் கலைஞரின் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது 56 கிராமங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சமியா ஆனந்த், வேளாண்மை இணை இயக்குனர் முத்து லட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் (மா தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேனி, பெருமாள்சாமி வேளாண்மை உதவி இயக்குனர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.