கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற ...

லக்னோ: நடந்து முடிந்த உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்., முதல் மார்ச்., 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை ...

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கஙகள் மாணவர்கள் உள்பட இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்கு போலீசார் மத்தியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க ...

ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் துருக்கி டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு நீளமான தொங்கு பாலம் நேற்று திறக்கப்பட்டது.இந்த பாலத்தை துருக்கி ஜனாதிபதி மற்றும் தென் கொரியாவின் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர். இப்பாலம்,உலகின் மிக நீளமான தொங்கு பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக,துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் கூறுகையில்: “துருக்கியின் ஐரோப்பிய ...

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு ...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து பின்லாந்து முதல் இடத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. ஐ.நா ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 150 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம், தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது. இதில் இந்த ஆண்டு மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை ...

2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் நேற்று  (18/03/2022) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்தார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் வரவைப் பொறுத்த வரை வரி வருவாயாக 40 காசுகளும், வரியில்லா வருவாயாக 04 காசுகளும் கிடைக்கின்றன. மத்திய ...

பள்ளிகளில் அனைவரும் சீருடையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹிஜாப் அணிய கூடாது என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகாவில் முஸ்லிம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு நிர்வாகி ஒருவர் பேசியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிய தடை ...

நார்வே:இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 நாட்களாக தாக்குதல் ...

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழு(Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ...