உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து… இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து பின்லாந்து முதல் இடத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

ஐ.நா ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 150 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம், தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.

இதில் இந்த ஆண்டு மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 5வது முறையாக தக்கவைக்கிறது. 150 நாடுகள் கொண்ட இந்த தரவரிசையில் இந்தியா 136வது இடத்தில் உள்ளது.