5 சவரன் நகை கடன் தள்ளுபடி… 31ம் தேதிக்குள் அனைவருக்கும் திருப்பி வழங்கப்படும்- அமைச்சர் அறிவிப்பு..!

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 165 பேருக்கு நகையை திருப்பி வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, வரும் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டிலுள்ள 14.40 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி என தெரிவித்தார்.

நகை கடன் தள்ளுபடி தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்கள் அளித்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். போலி நகை கடன் தள்ளுபடி கொடுக்க முடியாது என்று அமைச்சர் பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.