உ.பி.யில் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்.!!

லக்னோ: நடந்து முடிந்த உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்., முதல் மார்ச்., 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களான கோவா, மணிப்பூர்,உத்தரகண்ட், உ.பி., ஆகிய மாநிலங்களில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டன. உ.பி., மாநிலத்தில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து வரும் 25ம் தேதி இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்க உள்ளார்.