ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது. 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம் ரூபி நகரில் டாக்டர் ரவி ஆறுமுகம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்த வீட்டு கட்டுமான பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள மூங்கில் பட்டி, குமரேசபுரத்தை சேர்ந்த சதீஸ் (வயது 27) என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று கட்டிடத்தில் கான்கீரிட் பலகைகளை கழட்டும் போது திடிரென்று கான்கிரீட் ...

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ராஜ வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகள் கமலி ஸ்ரீ (வயது 23) பீளமேட்டில் உள்ள உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தன்னுடன் படித்த கவுரிசங்கர் என்பவரை காதலித்து வந்தாராம். அவரது பழக்க வழக்கங்கள் சரியில்லாததால் அவருடன் பழகுவதை ...

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி, திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 66 )தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார். ...

பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில்  அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் ...

கோவை அவினாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இது, 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது. பெட்டி வடிவ கர்டர் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது. மேலும், 10½ மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி .காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசீம். அவரது மனைவி மும்தாஜ் ( வயது 30) இவர் நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கோவை செட்டி வீதி கே. ஜி. தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் அறிமுகம் ஆனார். ஆன்லைன் மூலம் வரத்தகம் செய்தால் அதிக ...

கோவை ராமநாதபுரம் மருதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த ஹரி பிரசாத் ( வயது 37) என்பவர் நெருங்கி பழகினார். இவர் திருப்பூர் மாவட்டம் நல்லூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவர் ...

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ...

கோவை: தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர். 2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. அதன் பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த ...