கோவை ராமநாதபுரம் மருதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த ஹரி பிரசாத் ( வயது 37) என்பவர் நெருங்கி பழகினார். இவர் திருப்பூர் மாவட்டம் நல்லூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவர் சீனிவாசனிடமும், இவரது நண்பர்களிடமும் பல தவணைகளில் ரூ 42 லட்சம் கடனாக வாங்கினாராம்.இதை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.இதை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சீனிவாசன் ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்துள்ளார். போலீசார் ஹரி பிரசாத் மீது மோசடி ,கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply