ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது. 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் என்பது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரெஸ்டாரண்டில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
Leave a Reply