கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம் ரூபி நகரில் டாக்டர் ரவி ஆறுமுகம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்த வீட்டு கட்டுமான பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள மூங்கில் பட்டி, குமரேசபுரத்தை சேர்ந்த சதீஸ் (வயது 27) என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று கட்டிடத்தில் கான்கீரிட் பலகைகளை கழட்டும் போது திடிரென்று கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி சதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கட்டுமான நிர்வாகி சீனிவாசன், சிவில் இன்ஜினியர் பிரின்ஸ் ஜோஸ்வா, கட்டிட உரிமையாளர டாக்டர். ரவி ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply