கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி, திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 66 )தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 தங்கச் செயின் , 2 வளையல்கள்,ஒரு தங்க காசு, ஒரு தங்க மோதிரம், 3 வைர மோதிரம் , ஒரு கைக்கடிகாரம் ,3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து அண்ணாமலை பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply