பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு
கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில் அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் அருகே இருந்த சாலையை மேம்படுத்தி சாலை அமைத்ததாகவும், பிறகு சாலை நடுவே கோவில் அமைந்து இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை இடித்து உள்ளனர். இது குறித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன இது குறித்து இந்து அமைப்பை சேர்ந்த 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறை சென்றதாகவும், மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறிய இந்த அமைப்பினர் மீண்டும் நேற்று மாநகராட்சியால் இடிக்கப்பட்டது இதைக் கேள்விப்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இந்து அமைப்புணருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இடித்த கோவில் சுவரை கட்டித்தர கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்றுக் கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அந்த கோவில் அரச மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வழிபட்டது அப்பகுதி பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Leave a Reply